வாகன பழுது நீக்கும் பட்டறையில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி


வாகன பழுது நீக்கும் பட்டறையில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
x

வாகன பழுது நீக்கும் பட்டறையில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார்.

திருச்சி

ஜீயபுரம்:

மின்சாரம் பாய்ந்தது

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள சின்ன கருப்பூர் மேலத்தெருவை சேர்ந்த ரெங்கராஜின் மகன் சிவகுமார்(வயது 21). இவர் குழுமணி வாரச்சந்தை எதிர்ப்புறத்தில் கணேசன் என்பவர் நடத்தி வரும் இருசக்கர வாகன பழுது நீக்கும் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ஒரு மோட்டார் சைக்கிளை தண்ணீரால் சுத்தப்படுத்தும் (வாட்டர் வாஷ்) பணியில் சிவகுமார் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சிவகுமார் கீேழ விழுந்தார்.

சாவு

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு குழுமணி மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது பற்றி தகவல் அறிந்து வந்த ஜீயபுரம் போலீசார், சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story