மின்னல் தாக்கி வாலிபர் பலி
மின்னல் தாக்கி வாலிபர் பலியானார்.
விருதுநகர்
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே இசலி கிராமத்தை சேர்ந்தவர் சண்முக முனீஸ்வரன் (வயது 29) இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் சண்முக முனீஸ்வரன் அவரது வீட்டின் மாடியில் தகர செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று மாலை திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் சண்முக முனீஸ்வரன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story