வாலிபர் வெட்டிக்கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை-மேட்டூர் கோர்ட்டு தீர்ப்பு


வாலிபரை வெட்டிக் கொன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேட்டூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சேலம்

மேட்டூர்:

கொலை

சேலம் மாவட்டம் மேட்டூர் குள்ளவீரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). இவருக்கும், அதே பகுதி சேர்ந்த கார்த்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2018-ம் ஆண்டு கார்த்தி தனது நண்பர்களான ஜெகதீஷ், பாலாஜி, பாஸ்கர் ஆகியோருடன் சேர்ந்து குள்ளவீரன் பட்டி அக்னி மாரியம்மன் கோவில் அருகே கண்ணனை வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கண்ணன் கொலை தொடர்பாக கார்த்தி, ஜெகதீஷ், பாலாஜி, பாஸ்கர் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை மேட்டூரில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி குமாரசாமி குமார சரவணன், கண்ணனை கொலை செய்த கார்த்தி, பாலாஜி, ஜெகதீஷ் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் தொடர்புடைய பாஸ்கர் ஏற்கனவே இறந்து விட்டார். அரசு தரப்பில் வக்கீல் குழந்தைவேல் ஆஜரானார்.


Next Story