வேலைவாய்ப்புக்கு இளைஞர்கள் தேர்வு முகாம்
ஏலகிரிமலையில் வேலைவாய்ப்புக்கு இளைஞர்கள் தேர்வு முகாம் நடைபெற்றது.
ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலையில் ஊராட்சி மன்றம் சார்பில் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஜோலார்பேட்டை வட்டாரம் ஏலகிரிமலை ஊராட்சி அளவிலான வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் தேர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைத்தரும் வகையில் இந்த முகாம் நடைபெற்றது குறிப்பாக இந்த முகாமின் மூலம் சுய வேலைவாய்ப்பு, தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு, பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, ஆகியோர்களுக்கு தனியார் நிறுவனம் பயிற்சி அளித்து வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்நிறுவனம் மூலம் பல்வேறு வேலைகளுக்கு பயிற்சி அளித்து, ஊதியத்துடன் வேலை வழங்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
இதில் மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, ஏலகிரிமலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், உதவி திட்ட அலுவலர், மற்றும் மகளிர் திட்டக்குழு உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.