வாக்களிப்பவர்களாக இல்லாமல் இளைஞர்கள் வேட்பாளர்களாக மாற வேண்டும் - மாணவர்களிடையே கலெக்டர் அனீஷ்சேகர் பேச்சு


வாக்களிப்பவர்களாக இல்லாமல் இளைஞர்கள் வேட்பாளர்களாக மாற வேண்டும் - மாணவர்களிடையே கலெக்டர் அனீஷ்சேகர் பேச்சு
x

வாக்களிப்பவர்களாக இல்லாமல் இளைஞர்கள் வேட்பாளர்களாக மாறவேண்டும் என மாணவர்களிடையே கலெக்டர் அனீஷ்சேகர் பேசினார்.

மதுரை


வாக்களிப்பவர்களாக இல்லாமல் இளைஞர்கள் வேட்பாளர்களாக மாறவேண்டும் என மாணவர்களிடையே கலெக்டர் அனீஷ்சேகர் பேசினார்.

தேசிய வாக்காளர் தினம்

இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 13-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நகைச்சுவை நாடகம் நிகழ்த்தி காட்டினர்.

தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு பாடல் மற்றும் ஸ்லோகன்களை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுந்து நின்று கலெக்டர் அனீஷ்சேகர் முன்னிலையில் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

வேட்பாளர்களாக வேண்டும்

பின்னர் மாணவர்கள் மத்தியில் கலெக்டர் அனீஷ்சேகர் பேசுகையில், தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். விரல் நுனியில் உள்ள சக்தியை பயன்படுத்த வேண்டும். இன்றைய இளைஞர்கள் வெறும் வாக்களிப்பவர்களாக இல்லாமல், வேட்பாளர்களாக மாற வேண்டும். இளைஞர்கள் அரசியலிலும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வாக்குகள் மூலம் ஆளுமையுள்ள அரசை தேர்ந்தெடுக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை காட்டிக்கொடுத்து இன்றைய இளைய சமுதாயம் வேட்பாளர்களாக களம் இறங்கி நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

நாளைய முதல்வர்களாக, அமைச்சர்களாக வர வேண்டும் என்பது என் கருத்து, 18 வயது பூர்த்தியான அனைவரும் தங்களை வாக்காளர்களாக இணைத்து கொள்ள வேண்டும், ஆளுமை உள்ள அரசை தேர்ந்தெடுத்தால்தான் நல்ல எதிர்காலம் அமையும், நல்லவர்கள், இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பேசினார்.


Next Story