இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி
இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி
வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க நிகழ்ச்சியும், பயிற்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமையில் நடந்தது. வேதாரண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி முன்னிலை வகித்தார். பயிற்சியில் பங்கேற்ற 421 பேரிடம் நேர்காணல் செய்யப்பட்டு, 171 பேருக்கு பணி ஆணைகளையும், வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள 36 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.36 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ், நகராட்சி தலைவர் புகழேந்தி ஆகியோர் வழங்கினர். இதில் திறன் வளர்ப்பு உதவி இயக்குனர் செந்தில்குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மகளிர் திட்ட உதவி அலுவலர் முருகேசன் வரவேற்றார். முடிவில் உதவி திட்ட அலுவலர் பாலன் நன்றி கூறினார்.