இளைஞர் திறன் திருவிழா
கொள்ளிடத்தில் இளைஞர் திறன் திருவிழா நடந்தது
கொள்ளிடம்:
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் கொள்ளிடம் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு அரசு துறையின் கீழ் இளைஞர் திறன் திருவிழா நடந்தது.விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்அருள்மொழி, ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் தகுதிக்கு ஏற்ப மாணவ, மாணவிகளுக்கு 3 மாத பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு பின்னர் அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.