விபத்தில் காலை இழந்ததால் ஆற்றில் குதித்து வாலிபா் தற்கொலை


விபத்தில் காலை இழந்ததால் ஆற்றில் குதித்து வாலிபா் தற்கொலை
x

விபத்தில் காலை இழந்ததால், ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

விபத்தில் காலை இழந்ததால், ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விபத்தில் காலை இழந்தார்

தஞ்சை அருளானந்த நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் ஸ்ரீராம்(வயது 28). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் தனது காலை இழந்தார். இதன் பிறகு செயற்கைகால் உதவியுடன் நடந்து வந்தார். இதனால் அவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

ஆற்றில் குதித்து தற்கொலை

இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வெளியில் சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை பகுதியில் உள்ள ஆற்றில் பிணமாக கிடந்த ஸ்ரீராம் உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் காலை இழந்ததால் ஆற்றில் குதித்து ஸ்ரீராம் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.


Next Story