குடும்ப தகராறில் இளைஞர் தற்கொலை


குடும்ப தகராறில் இளைஞர் தற்கொலை
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே குடும்ப தகராறில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஏ. என்.எஸ். நகரை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் மணிகண்டன் (வயது 35). தனியார் டூவீலர் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி திவ்யா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த சீர்காழி போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story