இளைஞர்களின் போர் தேங்காய் விளையாட்டு


இளைஞர்களின் போர் தேங்காய் விளையாட்டு
x

கீரமங்கலம் அருகே செரியலூர் கிராமத்தில் இளைஞர்களின் போர் தேங்காய் விளையாட்டு நடந்தது.

புதுக்கோட்டை

போர் தேங்காய்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, திருவாப்பாடி, மணமேல்குடி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பைங்கால், சாணாகரை, பேராவூரணி, தென்னங்குடி, வளப்பிரமன்காடு, பனஞ்சேரி, செருவாவிடுதி, களத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் போர் தேங்காய் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதாவது எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வதும். இந்த மோதலில் உடையும் தேங்காயை மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ.500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து செல்பவர்களும் உள்ளனர்.

500-க்கும் மேற்பட்ட தேங்காய்கள்

வழக்கம் போல கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில் இன்று விளையாட்டு திடலில் போர் தேங்காய் விளையாட்டு நடந்தது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் பைகளில் தேங்காய்களுடன் வந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு தேங்காய்களை நேருக்கு நேர் மோத வைத்தனர்.

பல தேங்காய்களை ஒரு சில தேங்காய்கள் மோதி உடைத்தது. சுமார் 500-க்கும் மேற்பட்ட தேங்காய்களுடன் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். சிலர் மோதி உடைத்த தேங்காய்களை சாக்கு நிறைய அள்ளி சென்றனர். அதே போல நேற்று மேற்பனைக்காடு கிராமத்தில் நடத்தப்பட்ட போர் தேங்காய் பரிசு போட்டியில் செரியலூர் கண்ணையா அதிக தேங்காய்களை உடைத்து முதல் பரிசு மற்றும் சுழற்கோப்பை பரிசாக பெற்றுள்ளார்.


Next Story