வாலிபா் மீது தாக்குதல்


வாலிபா் மீது தாக்குதல்
x

தஞ்சை அருகே வாலிபா் மீது தாக்குதல் நடத்தியதாக 8 பேர் மீது போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

வல்லம்;

தஞ்சை அருகே உள்ள ரெட்டிபாளையம் ராமநாதபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து (வயது38). சம்பவதன்று மருதமுத்து அவருடைய வீட்டுக்கு ராமநாதபுரம் ஊராட்சி அலுவலகம் வழியாக சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் மருதமுத்துவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மருதமுத்து தாக்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story