மைத்துனருக்கு அரிவாள் வெட்டு; மெக்கானிக் கைது
கோட்டூர் அருகே மைத்துனரை அரிவாளால் வெட்டிய மெக்கானிக் கைது செய்யப்பட்டாா்.
கோட்டூர்;
கோட்டூர் அருகே மைத்துனரை அரிவாளால் வெட்டிய மெக்கானிக் கைது செய்யப்பட்டாா்.
குடும்பத்தகராறு
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே தோட்டம் புதுத்தெருவை சேர்ந்தவர் கோகுல்நாத்(வயது29). இவருடைய மனைவி ராகசுதா. கோகுல்நாத் கோட்டூர் சத்திரம் பகுதியில் கார் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோகுல்நாத் தனது மனைவி ராகசுதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து ராகசுதா தனது தம்பி மூவாநல்லூர் ஜெயந்தி நகரை சேர்ந்த மணிமாறனுக்கு(24) தகவல் தெரிவித்தார். இதனால் மணிமாறன் தனது ஊர்க்காரர்களுடன் கோகுல்நாத் வீட்டுக்கு வந்து தனது சகோதரியை தாக்கியது குறித்து கேட்டார்.
கைது
அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த கோகுல்நாத் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து மணிமாறன் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மணிமாறனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்்குப்பதிவு செய்து கோகுல்நாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.