இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை ஆய்வு கூட்டம்


இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2022 7:00 PM GMT (Updated: 23 Dec 2022 7:00 PM GMT)

திண்டுக்கல்லில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை ஆய்வு கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்புத் திட்டம் செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன் திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கூடுதல் தலைமை செயலர் அதுல்யாமிஸ்ரா, நில நிர்வாக ஆணையர் நாகராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., காந்திராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளன. ஒரு சில திட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தி செயல்படுத்த நடவடிக்கை வேண்டும். வேடசந்தூர் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் மூலிகை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது என்றார். பின்னர், பல்வேறு துறைகளின் சார்பில் 5,001 பயனாளிகளுக்கு ரூ.33 கோடியே 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன், துணைத்தலைவர் பொன்ராஜ், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி கலெக்டர் பிரியங்கா, மாவட்ட வன அலுவலர் பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story