வெளிமாநில மது விற்ற வாலிபர் கைது


வெளிமாநில மது விற்ற வாலிபர் கைது
x

வெளிமாநில மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

வெளிமாநில மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டை சுற்று பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாண்டப்பட்டி, அம்பேத்கர் நகர் பகுதியில் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 34) என்பதும், வெளிமாநில பாக்கெட் மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து, 15 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story