திருநகரில் ருசிகரம்-பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெற்று வகுப்பறைக்கு சென்ற மாணவர்கள்


திருநகரில் ருசிகரம்-பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெற்று வகுப்பறைக்கு சென்ற மாணவர்கள்
x

திருநகரில் பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெற்று வகுப்பறைக்கு சென்ற மாணவர்கள்

மதுரை

திருப்பரங்குன்றம்,

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்த வரிசையில் திருப்பரங்குன்றம் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி திறக்கப்பட்டது. 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 6-ம் வகுப்பு சேர்ந்த புதிய மாணவர்களுக்கு சந்தனம், குங்குமம் மற்றும் இனிப்பு கொடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமையில் ஆசிரியர், ஆசிரியைகள் வரவேற்றனர். இதேபோல 7-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றனர். இந்த நிலையில் கிராம, நகர்புறங்களில் இருந்து 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 6-ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோர் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர். பெற்றோர்களும் அவர்களது மகன்களுக்கு நெற்றியில் திலகமிட்டு நன்றாக படித்து பள்ளிக்கும், தங்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று ஆசி வழங்கினர்.


Next Story