மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகளை வலம் வந்த ஜக்கி வாசுதேவ் இந்தியா திரும்பினார்


மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகளை வலம் வந்த ஜக்கி வாசுதேவ் இந்தியா திரும்பினார்
x

மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகளை வலம் வந்த ஜக்கி வாசுதேவ் இந்தியா திரும்பினார்.

சென்னை,

மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் சட்டம் இயற்ற வலியுறுத்தி 100 நாட்களில் 30 ஆயிரம் கி.மீ. மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு வரும் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், தனது பயணத்தை மார்ச் 21-ந் தேதி லண்டனில் இருந்து தொடங்கினார். அவர் சென்ற நாடுகளில் எல்லாம் 'மண் காப்போம்' இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கப்பட்டது.

67 நாட்களில் 26 நாடுகளில் மோட்டார்சைக்கிளில் பயணித்த ஜக்கி வாசுதேவ் நேற்று இந்தியா வந்தார். குஜராத் ஜாம்நகர் துறைமுகத்தில் இந்திய கடற்படையின் இசைக்குழுவினர் ஜக்கி வாசுதேவுக்கு மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர். ஜாம்நகர் அரச குடும்பத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் முப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் பேசும்போது, 'சமூக வலைத்தளங்களில் அனைவரும் மண் வளம் குறித்து தொடர்ந்து பேசுங்கள். இதற்காக தினமும் குறைந்தபட்சம் 15 முதல் 20 நிமிடங்களாவது செலவிடுங்கள்' என்றார்.

தனது பயணத்தின் நிறைவாக பல்வேறு மாநிலங்களில் வழியாக அடுத்த மாதம் 21-ந் தேதி ஜக்கி வாசுதேவ் தமிழ்நாடு வருகிறார்.


Next Story