மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல குழு கூட்டம்


மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல குழு கூட்டம்
x

மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல குழு கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யூ. கரூர் மண்டல குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட செயலாளர் கோவிந்தராசு வரவேற்று பேசினார். மண்டல செயலாளர் தனபால் வேலை அறிக்கையை வாசித்தார். மாநில துணைத்தலைவர்கள் ஸ்ரீதேவி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு தனி கழிவறை, ஓய்வறைகள் வழங்க வேண்டும், 60 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,

கேங்மேன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story