மண்டல அளவிலான கபடி போட்டி


மண்டல அளவிலான கபடி போட்டி
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளையொட்டி மண்டல அளவிலான கபடி போட்டி நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளையொட்டி வடக்கு மண்டல அளவிலான கபடி போட்டி விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் நடைபெற்றது. இப்போட்டிக்கு மாவட்ட துணை செயலாளரும் மாநில ஆதிதிராவிட நல இணை செயலாளருமான புஷ்பராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், அனைவரையும் வரவேற்றார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு, கபடி போட்டியை தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு மாநில விளையாட்டு மேம்பாட்டுக்குழு துணை செயலாளர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., பரிசு வழங்கி பாராட்டினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், துணை அமைப்பாளர் தயா.இளந்திரையன், நகர பொருளாளர் இளங்கோ, துணை செயலாளர் புருஷோத்தமன், நிர்வாகிகள் ஜெயக்குமார், பழனி, கோபிநாத், அலெக்ஸ், விஜி, ரமேஷ், கலையரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story