மண்டல அளவிலான கராத்தே போட்டி


மண்டல அளவிலான கராத்தே போட்டி
x

பாளையங்கோட்டையில் மண்டல அளவிலான கராத்தே போட்டி நடந்தது.

திருநெல்வேலி

டிராகன் ஷிடோ ரியு கராத்தே அமைப்பின் நெல்லை மாவட்ட சங்கம் சார்பில் மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அளவில் 6 மாவட்டங்களை சேர்ந்த 250 கராத்தே வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பல்வேறு வயது பிரிவுகளில் சப்-ஜூனியர், ஜூனியர், சப்-சீனியர், சீனியர் என்ற அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடக்க நிகழ்ச்சிக்கு கராத்தே அமைப்பின் தமிழ்நாடு நிறுவனரும், தொழில்நுட்ப இயக்குனரும், அகில இந்திய ஷியோடோ, ரியோ கராத்தே சங்க தலைவருமான செந்தில்குமார் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட அமைப்பின் தலைமை கராத்தே பயிற்சியாளர் மற்றும் போட்டி அமைப்பாளர் சுப கணேஷ் போட்டிகளை தொடங்கி வைத்தார். நடுவர்களாக சிவா, சுபகணேஷ், விஜயசேகர், ரத்தினகுமார், கார்த்திகேயன், தமிழ் செல்வன், ஜெயகுமார், கார்த்திகேயன், ஆனந்த், கவுசல்யா, கல்பனா தேவி ஆகியோர் செயல்பட்டனர்.

மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இதில் அழகியபாண்டியபுரம் பஞ்சாயத்து தலைவர் வேலம்மாள் ஆனந்த், வாகைகுளம் பஞ்சாயத்து துணைத்தலைவர் பிரயதர்ஷினி செந்தில், கண்ணன் வைத்தியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story