மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்வு முகாம்


மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்வு முகாம்
x

மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்வு முகாம் 22-ந்தேதி நடக்கிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சு.முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அஞ்சலக வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்ப்பதற்கான மண்டல அளவிலான குறைதீர்வு முகாம் வருகிற 22-ந் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே, அஞ்சலக வாடிக்கையாளர்கள் பதிவுத்தபால், விரைவுத்தபால், மணியார்டர், சேமிப்பு கணக்குகள், சேமிப்பு பத்திரங்கள், சாதாரண தபால் பட்டுவாடா, அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு உள்ளிட்ட அஞ்சல் சேவை குறித்த தங்களின் புகாரினை முழு விவரங்களுடன் கூட்ட அரங்கு, 2-ஆவது தளம், அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம், அஞ்சலக வளாகம், கோயமுத்தூர்-641002 எனும் முகவரிக்கு வருகிற 14-ந்் தேதிக்குள் அஞ்சல் உறையின்மேல் DAK ADALAT CASE என்று எழுதி அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story