சேவூர் உணவு கிடங்கில் மண்டல மேலாளர் ஆய்வு


சேவூர் உணவு கிடங்கில் மண்டல மேலாளர் ஆய்வு
x

சேவூர் உணவு கிடங்களில் மண்டல மேலாளர் ஆய்வு ரத்தன் சிங்க் மீனா செய்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சேவூரில் உள்ள உணவு கிடங்கில் உணவு கழக மண்டல மேலாளர் ரத்தன் சிங்க் மீனா ஆய்வு செய்தார். அப்போது அவர், அரிசி, கோதுமைகளின் தரம் குறித்தும், இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களையும் பார்வையிட்டார்.

பின்னர் உணவு கழக மண்டல மேலாளர் ரத்தன் சிங்க் மீனா நிருபர்களிடம் கூறுகையில், இந்த உணவு கிடங்கின் மூலம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை மற்றும் அரிசிகளை வழங்கி வருகிறது. தற்போது கிடங்கில் 28 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியும், 6 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையும் இருப்பில் உள்ளது' என்றார். ஆய்வின் போது அதிகாரிகள் விஜயா, முத்துக்குமரன், மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story