மண்டல கைப்பந்து போட்டி
ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல கைப்பந்து போட்டி நடந்தது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்ட அணிகள் கலந்து கொண்டன. கல்லூரி முதல்வர் மணிமாறன் போட்டிகளை தொடங்கி வைத்தார். இப்போட்டியில் முதலிடத்தை வள்ளியூர் பெட் பாலிடெக்னிக் கல்லூரியும், 2-வது இடத்தை சேரன்மாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியும், 3-வது இடத்தை நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அணியும், 4-வது இடத்தை கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அணியும் பிடித்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளை ஸ்காட் நிறுவனர் கிளிட்டஸ் பாபு வாழ்த்தினார். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு ஸ்காட் வளாக துணை மேலாளர் தம்பி துரை தலைமை தாங்கினார். ஸ்காட் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் டாக்டர் ஜான் கென்னடி, நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் அன்வர் ராஜா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.