மண்டல அளவிலான ஆணழகன் போட்டி


மண்டல அளவிலான ஆணழகன் போட்டி
x

ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரியில் மண்டல அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரி இணைந்து நடத்திய மண்டல அளவிலான ஆணழகன் போட்டி ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஏ.என்.சரவணன், நிர்வாக அறங்காவலர் ஏ.என்.செல்வம், செயலாளர் ஏ.என்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஜீ.ராஜலட்சுமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) ஆர்.விஜயராகவன் கலந்து கொண்டு ஆணழகன் போட்டியினை தொடங்கி வைத்தார். கல்லூரி நிர்வாகவியல் துறை தலைவர் கே.வி..சிவக்குமார், வணிகவியல் துறை தலைவர் கே.விஜயலட்சுமி, வேலூர் மண்டல விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.அன்பு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். டி.கே.குருநாதன், சி.ஜே.குமார், என்.திருநாவுக்கரசு, மாஸ்டர் ஜி.திருவாசகம் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டு ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட நபர்களை தேர்வு செய்தனர்.

இதில் 20 கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மண்டல அளவிலான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரி மாணவர்கள் பெற்றனர். வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி இரண்டாவது இடமும், ஆற்காடு எஸ்.எஸ்..எஸ்.கல்லூரி மாணவன் வி.சந்தோஷ் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றார். தேர்வு பெற்ற நபர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பதக்கம் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன. முடிவில் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் வி.தியாகராஜன் நன்றி கூறினார்.


Next Story