மண்டல அளவிலான ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாம்; ஜூலை 26-ந் தேதி நடக்கிறது


மண்டல அளவிலான ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாம்; ஜூலை 26-ந் தேதி நடக்கிறது
x

மண்டல அளவிலான ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாம் ஜூலை 26-ந் தேதி நடக்கிறது.

திருச்சி

குறை தீர்க்கும் முகாம்

தபால்துறை சார்பில் மண்டல அளவிலான ஓய்வூதியர் குறை தீர்க்கும் முகாம் ஜூலை மாதம் 26-ந் தேதி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் அலுவலகத்தில் நடக்கிறது. குறைகளை இந்த மாதம் (ஜூன்) 30-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தபால்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களின் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் தாமதம், ஓய்வூதிய பலன்கள் கிடைக்க பெறாதவர்களின் குறைகள், ரெயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்று, அஞ்சல்துறையின் மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குறைகள் பரிசீலிக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட குறை தீர்க்கும் முகாம் சம்பந்தமாக கோட்ட அளவில் ஏற்கனவே மனு கொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதிலில் திருப்தியடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். நேரடியாக இந்த முகாமிற்கு அனுப்பப்படும் புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. குறைகளை ஓய்வூதியர் குறைதீர்க்கும் முகாம், முத்துமீனா, கணக்கு அதிகாரி, அஞ்சல்துறைத்தலைவர் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சி -620001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

காணொலி காட்சி

தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் முகாம் ஜூன்-2023 என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். குறைகளை சாதாரண தபால், பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். தனியார் கூரியர் சேவை மூலம் அனுப்பப்படும் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

நேரில் வர இயலாதவர்களுக்கு ஓய்வூதியர் குறைதீர்க்கும் முகாமை காணொலி காட்சி அல்லது தொலைபேசி உரையாடல் அல்லது வாட்ஸ்-அப் காணொலி அலைப்பு மூலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தங்களின் தற்போதைய வீட்டு முகவரி, ெசல்ேபான் எண் மற்றும் அருகில் இருக்கும் அஞ்சலக முகவரி ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டு தபால்களை மேற்கூறிய முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த தகவலை மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.


Next Story