ராஜா வேடமணிந்து வாக்கு சேகரித்த சின்னத்திரை நடிகர்

பழனியில் ராஜா வேடமணிந்து சின்னத்திரை நடிகர் ஒருவர் வாக்கு சேகரித்தார்.
பழனி:
பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சுயேச்சையாக போட்டியிடும் சின்னத்திரை நடிகர் முனிஸ்ராஜ் என்பவர் பழனி அடிவார பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் ராஜா வேடமணிந்து வீதி, வீதியாக சென்று தனக்கு வாக்களிக்கும்படி பொதுமக்களிடம் துண்டுபிரசுரத்தை வழங்கினார்.
அந்த பகுதியில் இருந்த பெண்கள், இளைஞர்கள் அவருடன் நின்று செல்பி எடுத்தனர்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவரிடம் கேட்டபோது, ஊழலை ஒழிக்க பிறந்த ஊரான பழனியில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கி இருப்பதாக கூறினார்.
Related Tags :
Next Story