இந்தியாவுக்கு எதிராக "சீன ஆக்கிரமிப்பு" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு
லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுபகுதியில் டன் இந்தியாவுக்கு எதிரான சீன ஆக்கிரமிப்பால் கவலை அடைந்துள்ளேன் என அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
20 ஆண்டுகள் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தாலும் இருநாடுகளும் தங்களது 3,500 கி.மீ எல்லைய பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியவில்லை மற்றும் ஒருவருக்கொருவர் வசம் உள்ள தொலைதூரப் பகுதிகளின் பெரிய பகுதிகளுக்கு உரிமை கோர முடியவில்லை.
அதுபோல் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் மற்றும் தைவான் நீரிணைப்புகளில் அமெரிக்க கடற்படை தனது ரோந்துப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவுடனான சீனாவின் இராணுவ மோதல் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் குறித்து வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன.
இந்தியா-சீனா இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். ஆனால் அதை ஏற்க இந்தியா நாசூக்காக மறுத்துவிட்டது. இதேபோல் சீனாவும் டிரம்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
சீன இராணுவத்தால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுடன் அமெரிக்கா கூட்டாளியாக முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் லடாக்கில் எல்லை பகுதியில் இந்தியாவுக்கு எதிரான சீன ஆக்கிரமிப்பால் தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவர் எலியட் ஏங்கல் திங்களன்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவர் எலியட் ஏங்கல் கூறியதாவது:-
"இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதியில் நடந்து வரும் சீன ஆக்கிரமிப்பால் நான் மிகவும் கவலைப்படுகிறேன். சர்வதேச சட்டத்தின்படி மோதல்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக அண்டை நாடுகளை கொடுமைப்படுத்தத் தயாராக இருப்பதாக சீனா மீண்டும் நிரூபித்து இருக்கிறது,"
நாடுகள் அனைத்தும் ஒரே மாதிரியான விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். இந்தியாவுடனான அதன் எல்லைக் பிரச்சினைகளை தீர்க்க சீனா மதிக்க வேண்டும் என்றும் தூதரக மற்றும் இருக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் நான் கடுமையாக கேட்டுக்கொள்கிறேன்.
Related Tags :
Next Story