மிகவும் விலை உயர்ந்த விவாகரத்து: கோடீஸ்வரியான பெண்
கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதன் மூலம் ஒருபெண் கோடீஸ்வரியாகி உள்ளார்
பெய்ஜிங்
உலகில் மிகவும் விலையுயர்ந்த விவாகரத்து அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் மற்றும் மெக்கென்சி பெசோஸ் விவாகரத்து ஆகும் தனது ஒஅங்குகளில் 4 சதவீத பங்குகளில் மெக்கன்சிக்கு வழங்கினார், மெக்கென்சி இப்போது 48 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டுள்ளார் மற்றும் உலகின் நான்காவது பணக்கார பெண்மணி ஆக உள்ளார்.
அதுபோல் மேலும் ஒரு விலை உயர்ந்த விவகாரத்து நடைபெற்று உள்ளது. சீனாவின் காங்டாய் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனத்தின் தலைவர் டு வீமின்.இவரது மனைவி யுவான் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது டு வீமின் தனது தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் 161.3 மில்லியன் பங்குகளை தனது முன்னாள் மனைவி யுவானுக்கு மாற்றி இதன் மதிப்பு 320 கோடி அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் சுமார். ரூ.24 ஆயிரம் கோடி) இருக்கும் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மே 29 அன்று தாக்கல் செய்யப்பட்ட தகவலின்படி, யுவான் உலகின் பணக்காரர்களின் வரிசையில் சேர்ந்து உள்ளார். யுவான் சீனாவின் சர்வதேச வணிக மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார்.49 வயதான யுவான் தற்போது நேரடியாக பங்குகளை வைத்திருக்கிறார்.
ஷென்சென் நகரில் வசிக்கும் டு வீமின் மே 2011 மற்றும் ஆகஸ்ட் 2018 க்கு இடையில் காங்டாயின் இயக்குநராக பணியாற்றினார். அவர் இப்போது துணை பெய்ஜிங் மின்ஹாய் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் துணை பொது மேலாளராக உள்ளார்.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு தடுப்பூசியை உருவாக்கும் திட்டத்தை நிறுவனம் அறிவித்தபோது, காங்டாய் பங்குகள் கடந்த ஆண்டில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன.
டுவின் நிகர சொத்து மதிப்பு முன்னாள் மனைவிக்கு பங்குகளை கொடுப்பதற்கு முன்பு 650 கோடி டாலர்களாக இருந்தது அதற்போது அது சுமார் 301 கோடி டாலராக குறைந்துள்ளது.
56 வயதான டு வீமின் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். கல்லூரியில் வேதியியல் படித்த பிறகு, 1987 ஆம் ஆண்டில் ஒரு கிளினிக்கில் பணிபுரியத் தொடங்கினார், 1995 ஆம் ஆண்டில் ஒரு பயோடெக் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக ஆனார், காங்டாய் 2017 ஆரம்ப பொது நிறுவன வாய்ப்பின் படி. 2009 ஆம் ஆண்டில், காங்டாய் 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு பின்னர் மின்ஹாயை நிறுவனத்தை வாங்கியது, மேலும் அவர் ஒருங்கிணைந்த நிறுவனத்தின் தலைவராக டு வீமின் உள்ளார்.
Related Tags :
Next Story