அமெரிக்க அதிபர் தேர்தல் : டிரம்பை எதிர்த்து ஜோ பிடன் களம் இறங்குவது உறுதி


அமெரிக்க அதிபர் தேர்தல் : டிரம்பை எதிர்த்து ஜோ பிடன் களம் இறங்குவது உறுதி
x
தினத்தந்தி 7 Jun 2020 2:34 PM IST (Updated: 7 Jun 2020 2:34 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவின் 47-வது துணை அதிபராக பதவி வகித்த 77 வயதான ஜோ பிடன், அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு கொரோனா வைரசுக்கு மக்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வரும் நிலையில், இந்த தேர்தல் நடைபெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஜனநாயக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது.

இந்தநிலையில் அமெரிக்காவின் 47-வது துணை அதிபராக பதவி வகித்த 77 வயதான ஜோ பிடன், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிட ஏதுவாக நடைபெற்ற பிரைமரி தேர்தலில் மூவாயிரத்து 979 வாக்குகளில் ஆயிரத்து 991 வாக்குகளை பெற்று, ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வாகி உள்ளார். இதன் மூலம் குடியரசுக் கட்சி வேட்பாளரான த​ற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து ஜோ பிடன் களம் இறங்குவது உறுதியாகி உள்ளது.


Next Story