ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது


ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது
x
தினத்தந்தி 11 Jun 2020 10:23 PM IST (Updated: 11 Jun 2020 10:23 PM IST)
t-max-icont-min-icon

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,02,436 ஆக அதிகரித்துள்ளது.

மாஸ்கோ,

உலகின் 200 நாடுகளை பார்த்து விட்டது, கொரோனா வைரஸ். அதுவும் 6 மாத காலத்திற்குள் இதை கொரோனா வைரஸ் தொற்று சாதித்திருக்கிறது. இதனால் 72 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தொற்றின் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி சிகிச்சைகள் பலனின்றி 4 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர்.

கொரோனாவுக்கு இன்னும் முறையான மருந்துகள் கண்டுபிடித்து சந்தைக்கு வரவில்லை. கொரோனா வராமல் தடுக்க தடுப்பூசி வந்திருக்கிறதா என்றால் அதுவும் பரிசோதனைகள் அளவில்தான் இருக்கின்றன. ஆனாலும் நாளுக்கு நாள் பல்லாயிரம் பேர் இந்த தொற்றுக்கு புதிது புதிதாக ஆளாகி வருகிறார்கள்.

இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,02,436 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியிருப்பதாவது:-

ரஷ்யா கடந்த 24 மணி நேரத்தில் 8,779 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 5,02,436 ஆக அதிகரித்துள்ளது. மாஸ்கோவில் அதிகபட்சமாக 2 லட்டம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரஷ்யாவில் கொரோனாவுக்கு 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனாவுக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கொரோனா தொற்று ஒருபக்கம் அதிகரிக்கும் நேரத்தில் தலைநகர் மாஸ்கோவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

Next Story