பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருக்கு கொரோனா


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Jun 2020 12:55 AM IST (Updated: 12 Jun 2020 12:55 AM IST)
t-max-icont-min-icon

முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப்புக்கு (வயது 68) கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும், நாட்டின் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப்புக்கு (வயது 68) கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவர் வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே இதே கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் ஷாகித் காகன் அப்பாசி, பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி ஷேக் ரஷித், பிரதமர் இம்ரான்கான் கட்சியின் பஞ்சாப் மாகாண எம்.எல்.ஏ. சவுத்ரி அலி அக்தர் ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story