பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்ட 105 வயது முதியவர்
பாகிஸ்தானில் முன்னாள் ராணுவ வீரரான 105 வயது முதியவர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு உள்ளார்.
லாஹூர்,
பாகிஸ்தான் நாட்டில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்து 21 ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து 1 லட்சத்து 13 ஆயிரத்து 623 பேர் வீடு திரும்பியுள்ளனர். 4,551 பேர் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வருபவர் பசல் ராஃப். அந்நாட்டு ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த வீரரான அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் கொரோனா பாதிப்பில் இருந்து அவர் முழுவதும் விடுபட்டார்.
தொடர்ந்து அடுத்தடுத்து அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கடந்த வியாழ கிழமை அவருக்கு நடந்த 2வது பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது. இதனை அடுத்து அவர் நேற்று வீட்டுக்கு திரும்பினார். அவரது நிலை தொடர்ந்து சீராக உள்ளது. கொரோனா பாதித்த 105 வயது முதியவர் அதில் இருந்து விடுபட்டது அந்நாட்டு மக்களிடையே நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story