புதிய உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
‘ஒபேக் 16’ என்ற புதிய உளவு செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஜெருசலேம்,
மேம்பட்ட திறன்களைக் கொண்ட மின்ஒளியியல் உளவு செயற்கைக்கோளான ‘ஒபேக் 16’ உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 4 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.
இதையடுத்து புவியின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோள், தகவல்களை பரிமாற தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவ மந்திரி பென்னி கான்ட்ஸ் கூறுகையில் “ ‘ஒபேக் 16’ உளவு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது அசாதாரண சாதனையாகும். இஸ்ரேல் அரசின் பாதுகாப்பிற்கு தொழில்நுட்ப மேன்மையும் உளவுத்துறை திறன்களும் அவசியம்.” என கூறினார்.

Related Tags :
Next Story