டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருகிறது- மைக் பாம்பியோ


டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருகிறது- மைக் பாம்பியோ
x
தினத்தந்தி 7 July 2020 4:27 AM GMT (Updated: 7 July 2020 4:27 AM GMT)

டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது அமெரிக்கா குறித்து ஆலோசித்து வருவதாக வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.


வாஷிங்டன்

லடாக் எல்லையில் ஜூன் 15-ம் தேதி சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

இதனிடையே இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிக்-டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.  சீன அரசு ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' டிக்-டாக் தடையால் அதன் தாய் நிறுவனமான 'பைட்-டான்ஸ்' நிறுவனத்திற்கு ₹45,000 கோடி வருமானம் இழப்பீடு ஏற்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், டிக்-டாக் செயலியை அமெரிக்காவை விட இந்தியாவில் 2 மடங்கு அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்திய அரசு தடை விதித்துள்ளதால் சீன செயலிகள் மீதான முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

சீன செயலிகள் பயன்பாட்டில் இந்தியாவை அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்க சீன செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசிக்கபடுவதாக கூறப்பட்டது 

டிக்டாக் உள்ளிட்ட சீன சமூக ஊடக பயன்பாடுகளை தடை செய்வதை அமெரிக்கா ஆலோசித்து வருவதாக வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.

"நான் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு முன்னால் வெளியிட விரும்பவில்லை, ஆனால் நாங்கள் அதுகுறித்து ஆலோசித்து கொண்டிருக்கிறோம்" என்று பாம்பியோ கூறி உள்ளார்.


Next Story