கடவுள் ராமர் இந்தியர் அல்ல நேபாளி; இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபடுகிறது- நேபாள பிரதமர் சர்ச்சை கருத்து


கடவுள் ராமர் இந்தியர் அல்ல நேபாளி; இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபடுகிறது- நேபாள பிரதமர் சர்ச்சை கருத்து
x
தினத்தந்தி 14 July 2020 7:06 AM IST (Updated: 14 July 2020 7:06 AM IST)
t-max-icont-min-icon

ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காட்மாண்டு

அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நேபாளம்  லிபுலேக் கணவாய் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளை இணைத்து வெளியிடப்பட்ட வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்தது. தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயர்ஸி செய்வதாக குற்றம்சாட்டினார் . தற்போது புதிய சர்ச்சை  கருத்தை வெளியிட்டு உள்ளார்.

தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராமர் வசித்த அயோத்தி என்பது இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் அல்ல என்றும், நேபாளத்தின் பிர்குஞ்ச் மாவட்டத்தில் உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம் ஆகும்.(காட்மாண்டுவில் இருந்து 135 கீமீ தூரத்தில் உள்ளது)

நாங்கள் கலாச்சார ரீதியாக சற்று ஒடுக்கப்பட்டிருக்கிறோம். உண்மைகள் அத்துமீறப்பட்டுள்ளன எனகூறினார்.

Next Story