உலக செய்திகள்

கொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பரிதாபமாக உயிரிழந்த குழந்தை + "||" + COVID-19: Saudi boy dies after nasal swab stick breaks inside nose

கொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

கொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
சவுதி அரேபியாவில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
துபாய்

சவுதிஅரேபியாவில் அதிக உடல் வெப்பநிலை காரணமாகக் குழந்தை ஒன்றை அவரின் பெற்றோர்கள் அங்கிருக்கும் ஷாக்ரா பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப், அதாவது மாதிரிகளை எடுக்க மூக்கினுள் விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் விடும்போது குச்சி உடைந்துள்ளது.

இந்தக் குச்சியை வெளியில் எடுக்க குழந்தைக்கு மயக்க மருந்தை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். ஆனால், குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குழந்தை தனது சுயநினைவையும் இழந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 24 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை உயிரிழந்தது.இது குறித்து குழந்தையின் தந்தை அப்துல்லா அல் ஜவுபான் கூறுகையில், குழந்தைக்கு மயக்க மருந்தைக் கொடுக்க அனுமதி மறுத்ததாகக் கூறியுள்ளார்.

ஆனால், மருத்துவர்கள் இதை வலியுறுத்தியதாக கூறினார். அறுவைசிகிச்சை முடிந்த பிறகு, குழந்தைநல மருத்துவர் குழந்தையைப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறினார்.ஆனால், மருத்துவமனை நிர்வாகம் சிறப்பு மருத்துவர் விடுப்பில் இருப்பதாகவும், சுவாசக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாகக் குழந்தை சுயநினைவை இழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக அவர் தெரிவித்தார்.

குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைவதாக உணர்ந்த அவர் குழந்தையை சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கேட்டுக்கொண்டார். அனுமதி கிடைத்தும், ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகியுள்ளது.

இதனிடையே, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் மரணம் மற்றும் நிலைமையை தவறாக கையாண்டது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குழந்தையின் தந்தை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் விசாரணைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் இதுவரை நடந்துள்ள கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 19 கோடியை கடந்தது
இந்தியாவில் இதுவரை நடந்துள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 19 கோடியை கடந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
2. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் , மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியுள்ளார்.
3. அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு : இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
4. ஹஜ் புனித பயணத்துக்கு கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம்- மத்திய மந்திரி தகவல்
ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
5. மெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து விபத்து
சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள பிரபல மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.