வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு ரத்து டிரம்ப் அரசு திடீர் அறிவிப்பு


வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு ரத்து டிரம்ப் அரசு திடீர் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 July 2020 12:41 PM IST (Updated: 15 July 2020 12:41 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் மூலமாக மட்டும் நடத்தப்படும் பாடங்களில் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு வெளிநாட்டு விசா கட்டுப்பாடு ரத்து என டிரம்ப் அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.


நியூயார்க்

ஆன்லைன் முலமாக மட்டும் நடத்தப்படும் பாடங்களில் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அரசு கொண்டு வந்த புதிய கட்டுப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஆன்லைனில் மட்டும் வகுப்புகளுக்குச் சென்ற  சர்வதேச மாணவர்கள், தனிப்பட்ட அறிவுறுத்தலுடன் கல்லூரிக்கு மாற்ற முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரம் அறிவித்தனர்.

இதற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து ஹார்வார்டு பல்கலைக்கழகம் மற்றும் மாசாசூசெட்ஸ் கல்வி நிறுவனம் தரப்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது குடியேற்றத்துறை சார்பில் ஆஜரான அதிகாரிகள், வெளிநாட்டு மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை திரும்பப் பெறுவதாக தெரிவித்தனர்.


Next Story