புதுச்சேரியில் 2 நாள் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை


புதுச்சேரியில் 2 நாள் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
x
தினத்தந்தி 7 Nov 2021 12:20 PM GMT (Updated: 7 Nov 2021 12:20 PM GMT)

புதுச்சேரியில் நாளை, நாளை மறுநாள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக  நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்புக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கபட விருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் மழையின் தன்மை குறித்து 1-8-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார். 

Next Story