கிரிக்கெட்

20 ஓவர் உலகக்கோப்பை : அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் பாபர் அசாம் முதலிடம் + "||" + Babar Azam retains top T20 World Cup scorer Warner in 2nd position

20 ஓவர் உலகக்கோப்பை : அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் பாபர் அசாம் முதலிடம்

20 ஓவர் உலகக்கோப்பை : அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் பாபர் அசாம் முதலிடம்
இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிகபட்ச தனிநபர் ரன்களை இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் அடித்துள்ளார்
துபாய் 

கடந்த மாதம் 17 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய 20 ஓவர் உலக கோப்பை போட்டி நேற்றுடன் முடிவடைந்தது .நேற்று நடந்த  இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. 

கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தது. பாகிஸ்தான் ,ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , நியூசிலாந்து அணிகள் இந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறின.

இந்த தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 303 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி கோப்பை  வெல்ல முக்கிய காரணமாக இருந்த அந்த அணியின் டேவிட் வார்னர் பட்டியலில் 289 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

பாகிஸ்தான் அணியின் மற்றொரு தொடக்க வீரரான முகமது ரிஸ்வான் இந்த பட்டியலில் 281 ரன்களுடன் 3-வது இடத்தில்  உள்ளார். இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் , இலங்கை அணியின் அசலங்கா , நமீபியா அணியின் டேவிட் விசா ஆகியோர் இந்த பட்டியலில் முறையே 4, 5, மற்றும் 6 வது  இடத்தில்  உள்ளனர்.

இந்த பட்டியலில் இந்திய அணியின் கே எல் ராகுல் 194 ரன்களுடன் 11 வது இடத்திலும் மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் சர்மா 174 ரன்களுடன் 15 வது இடத்திலும் உள்ளனர்.

அதே போல் பந்துவீச்சில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்  வனிந்து ஹசரங்கா 16 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில்  உள்ளார்.அவரை தொடர்ந்து  ஆடம் சாம்பா 13 விக்கெட்டுகள், போல்ட் 13 விக்கெட்டுகள், ஹேசல்வுட் 11 விக்கெட்டுகள், ஷகிப் அல் ஹசன் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர். 

இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிகபட்ச தனிநபர் ரன்களை இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் அடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் அவர் 101 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

தொடர்புடைய செய்திகள்

1. ஜாண் டி ரோட்ஸ் - கிறிஸ் கெயிலுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை கூறிய பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி கிரிக்கெட் வீரர்கள் ஜாண் டி ரோட்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோருக்கு குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
2. ஒமைக்ரான் எதிரொலி: ஆஸ்திரேலியா- நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் தள்ளிவைப்பு
10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியுள்ளதால், தள்ளிவைக்கப்படுகிறது.
3. இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்
இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது.
4. ‘என் மீதான விமர்சனம் குறித்து கவலையில்லை’ - விராட் கோலி
எனது ஆட்டம் பற்றி வரும் விமர்சனம் குறித்து நான் கவலைப்படுவதில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார்.
5. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா தொற்று..!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் க்ளென் மேக்ஸ்வெல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.