சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை ஐகோர்ட்டு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்தது.
இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பொறுப்பிற்கு வரும் வரை தலைமை நீதிபதி பணிகலை தற்காலிகமாக நீதிபதி துரைசாமி கவனிப்பார் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






