நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
x
தினத்தந்தி 22 Nov 2021 3:36 PM IST (Updated: 22 Nov 2021 3:36 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.



புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29ந்தேதி நடைபெற உள்ளது.  இதில், புதிய வேளாண் சட்டங்கள், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

இந்த நிலையில், கூட்டத்தொடரை முன்னிட்டு வருகிற 28ந்தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.  இந்த கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் என கூறப்படுகிறது.  இதேபோன்று, பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story