மாநில செய்திகள்

18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடர வாய்ப்பு...! + "||" + Rain Continued for Next 2 Hours in Several Districts of Tamilnadu

18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடர வாய்ப்பு...!

18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடர வாய்ப்பு...!
18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்பொழுதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதர்க்கு வாய்ப்பில்லை. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்  மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இதற்கிடையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர்,  மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளது.

அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளது.

தென்கடலோர தமிழகம், குமரிப்பகுதி, தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதிகளில் காற்றின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. கனமழை எதிரொலி : தென் மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கும் தக்காளி விலை
தொடர் மழையால் தென் மாநிலங்களில் தக்காளியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
3. கனமழை: கரூரில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை
கனமழை காரணமாக கரூரில் 1-8ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
4. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கனமழை
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கனமழையால் 13 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
5. கரூரில் கொட்டித்தீர்த்த கனமழை
கரூரில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வீடுகளில் மழைநீர் புகுந்தது.