வெளிநாடுகளில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா: இந்தியாவில் எதுவும் இல்லை - மத்திய சுகாதாரத்துறை


வெளிநாடுகளில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா: இந்தியாவில் எதுவும் இல்லை - மத்திய சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 26 Nov 2021 10:32 AM GMT (Updated: 26 Nov 2021 10:32 AM GMT)

இந்தியாவில் இதுவரை புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் எதுவும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தென்னாப்பிரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் பி.1.1.529 என அடையாளம் காணப்பட்ட புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக அங்குள்ள விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

இந்தநிலையில் அந்நாட்டில் இருந்து பயணிகள் வருவதற்கு ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் தடை விதித்துள்ளன. 

இதனை அடுத்து மத்திய அரசும், தென்னாப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளை கடுமையாகச் பரிசோதனை செய்து, தொற்று இருந்தால் அதனை தெரிவிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஆலோசனைகளை வழங்கி உள்ளது.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில்  இதுவரை புதிய வகை உருமாற்ற கொரோனா  எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

Next Story