சீனாவின் யாங்ஜியாங் நகரில் பஸ் கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி


சீனாவின் யாங்ஜியாங் நகரில் பஸ் கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி
x
தினத்தந்தி 26 Aug 2019 10:15 PM GMT (Updated: 26 Aug 2019 10:10 PM GMT)

சீனாவின் குவாங்டாங் மாகாணம் யாங்ஜியாங் நகரில் பஸ் ஒன்று கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலியாயினர்.


* சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலை அருகே சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து, தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர்.

* ஆப்கானிஸ்தானில் நங்கார்ஹர் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு வெளியே குண்டு வெடித்தது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

* சீனாவின் குவாங்டாங் மாகாணம் யாங்ஜியாங் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.

* அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க இங்கிலாந்து சார்பில் 10 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 கோடியே 15 லட்சம்) வழங்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி அளித்துள்ளார்.

* ஈரான்-அமெரிக்கா இடையிலான பிரச்சினைக்கு தூதரக ரீதியில் தீர்வு காண வேண்டும் என ஈரான் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷாரீப் தெரிவித்துள்ளார்.


Next Story