ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில், முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு


ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில், முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு
x
தினத்தந்தி 1 Jun 2020 6:37 AM IST (Updated: 1 Jun 2020 6:37 AM IST)
t-max-icont-min-icon

ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில், முதன்முதலாக ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

• பாகிஸ்தானில் கராச்சி நகரில் சமீபத்தில் குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 97 பேர் பலியாகினர். விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்களை ஆராயும் பணி பிரான்சில் 2-ந் தேதி முதல் நடைபெறும் என்று பிரான்ஸ் விமான விசாரணை ஆணையம் கூறி உள்ளது.

• ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில், முதன்முதலாக ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். அவர் 65 வயதான லாரி டிரைவர் ஆவார்.

• இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகின்றன. இதனால் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்த மக்கள் இனி வெளியே வந்து சந்திப்புகளை நடத்துவதற்கு வழி பிறந்துள்ளது

• ஜெருசலேம் நகரில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்சா மசூதி, 2 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ளது.

• ஜெர்மனியில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 286 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 81 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Next Story