அதிபரானால் எச்1 பி விசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்வேன்: ஜோ பிடன்


அதிபரானால் எச்1 பி விசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள  தடையை ரத்து செய்வேன்: ஜோ பிடன்
x
தினத்தந்தி 2 July 2020 1:34 PM IST (Updated: 2 July 2020 1:34 PM IST)
t-max-icont-min-icon

எனது நான் அதிபரானால் எச்.1 பி விசாவுக்கு தடை விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வேன் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.  

இந்த நிலையில், அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என்ற கோஷத்தை முன்வைத்து வரும் டிரம்ப்,  கடந்த ஜூன் 23 ஆம் தேதி
 நடப்பு ஆண்டு இறுதி வரை எச்.1 பி உள்பட பணிகள் தொடர்பான அனைத்து விசாக்களையும் நிறுத்திவைப்பதாக அறிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பால் இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் அங்கு பணியாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், நான் அதிபராக தேர்வானால் எச் 1 பி விசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்வேன் என்று  ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். டிஜிட்டல் முறையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஜோ பிடன், “  எச்.1 பி விசாவை அவர் (டிரம்ப்) ரத்து செய்துள்ளார். ஆனால், எனது நிர்வாகத்தில் அது இருக்காது” என்றார். 

Next Story