உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 8 July 2020 3:00 AM IST (Updated: 8 July 2020 12:33 AM IST)
t-max-icont-min-icon

உலகைச் சுற்றி...

* ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள கியாசு பிராந்தியத்தில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. இதில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

* வடகொரியா மற்றும் தென்கொரியா இடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீபன் பிகன் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு 3 நாள் பயணமாக சென்று உள்ளார்.

* ஏமனின் மேற்குப் பகுதியிலுள்ள மாகாணங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் கடந்த 24 மணி நேரத்தில் 60 வது முறை வான்தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story