பிரேசிலில் ஒரே நாளில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 19 லட்சத்தை கடந்தது


பிரேசிலில் ஒரே நாளில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 19 லட்சத்தை கடந்தது
x
தினத்தந்தி 15 July 2020 10:27 PM GMT (Updated: 15 July 2020 10:27 PM GMT)

பிரேசிலில் ஒரே நாளில் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 19 லட்சத்தை கடந்துள்ளது.

பிரேசிலயா, 

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் 2வது இடத்தில் பிரேசில் உள்ளது.

அங்கு கோரோனோ வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதேபோல் உயிரிழப்பும் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 47 ஆயிரத்துக்கு 857 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது. அதாவது அந்த நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 26 ஆயிரத்து 824 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் அங்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 1,300 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 74 ஆயிரத்து 133 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story