கொரோனா தடுப்பூசி: நெருங்குகிறதா? ரஷ்யா - அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய திட்டம்


கொரோனா  தடுப்பூசி: நெருங்குகிறதா? ரஷ்யா - அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய திட்டம்
x
தினத்தந்தி 16 July 2020 4:07 PM GMT (Updated: 2020-07-16T21:37:36+05:30)

கொரோனா தடுப்பூசி: நெருங்குகிறதா? ரஷ்யா - அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய திட்டம்

மாஸ்கோ,

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகின் முன்னணி நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.  ரஷ்யாவும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கான முதற்கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக ரஷ்யா முடித்துள்ளது. 38 மனிதர்களுக்கு முதற்கட்ட மனித பரிசோதனையை மேற்கொண்ட ரஷியா நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதை கண்டறிந்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்களிடையே 3-ம் கட்ட பரிசோதனையை ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய அளவில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ள ரஷியா, சோதனை அடிப்படையில் 3 கோடி டோஸ் தயாரிக்கப்பட்டு உள்நாட்டில் பயன்படுத்தப்படும். அதன்பின் வெளிநாடுகளுக்கு 17 கோடி டோஸ் தயாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


கொரோனாவுக்கு 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் ஆரம்ப கட்ட பரிசோதனையில் உள்ளன. இவற்றில், 2 தடுப்பூசிகள் மனித மருத்துவ பரிசோதனையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

Next Story