உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25.74 கோடியாக உயர்வு


உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25.74 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 21 Nov 2021 6:59 AM IST (Updated: 21 Nov 2021 6:59 AM IST)
t-max-icont-min-icon

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25.74 கோடியாக அதிகரித்துள்ளது.

வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 74 லட்சத்து 6 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 51 லட்சத்து 63 ஆயிரத்து 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23 கோடியே 23 லட்சத்து 55 ஆயிரத்து 659 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 98 லட்சத்து 87 ஆயிரத்து 734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 79 ஆயிரத்து 334 பேர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் இருக்கின்றனர்.
1 More update

Next Story