கேன்ஸ் திரைப்பட விழா- வேட்டி சட்டையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன்


கேன்ஸ் திரைப்பட விழா- வேட்டி சட்டையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன்
x

Image Courtesy : Twitter @Murugan_MoS

தினத்தந்தி 23 May 2022 12:22 PM IST (Updated: 23 May 2022 12:30 PM IST)
t-max-icont-min-icon

எல்.முருகன் வேட்டி சட்டையில் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்வில் இன்று பங்கேற்றுள்ளார்.

கேன்ஸ்:

75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்ற மத்திய இணை மந்திரி முருகனை பிரான்சுக்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரப் வரவேற்றார்.

கேன்ஸில் உள்ள மார்ச்சே டு பிலிம்ஸில், ஆடியோ விஷுவல் தொழிலில் தடம் பதிக்க உத்தேசித்துள்ள ஐந்து இந்திய ஸ்டார்ட்-அப்களின் பிரதிநிதிகளை அவர் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் எல்.முருகன் வேட்டி சட்டையில் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்வில் இன்று பங்கேற்றுள்ளார். அந்த விழாவில் அவர் வேட்டி சட்டையில் , நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனுடன் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வேட்டி சட்டையில் பார்த்திபனுடன் நிற்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் முருகன் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக வில்லேஜ் இன்டர்நேஷனல் ரிவியராவில் உள்ள இந்திய அரங்கை அவர் பார்வையிட்டார். பிரான்சுக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் உடன் சென்றிருந்தார். அப்பொழுது அதிகாரிகள், பிரதிநிதிகள் மற்றும் திரையுலக பிரமுகர்களுடன் டாக்டர் எல். முருகன் கலந்துரையாடினார்.


Next Story